நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 26/02/2025 | Edited on 26/02/2025

தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கும் கவின் கைவசம் கிஸ், மாஸ்க் மற்றும் நயன்தாராவுடன் இன்னும் பெயரிடாதப் படம் என மூன்று படங்களை வைத்துள்ளார். இதில் கிஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நயன்தாரா படம் குறித்த எந்த அப்டேட்டும் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் நான்கு போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் ஒரு போஸ்டரில் கவின் மட்டும் இடம் பெறுகிறார் மற்றும் இன்னொரு போஸ்டரில் ஆன்ரியா கையில் துப்பாக்கியுடன் இடம் பெறுகிறார். மற்றொரு போஸ்டரில் கவின் படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் ஒரு மாஸ்கை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறார். கடைசி போஸ்டரில் கவின் – ஆன்ரியா இருவரும் முறைத்த படியே ஒருவருக்கொருவர் பார்த்தபடி இருக்கின்றனர். 

Advertisement

இப்படத்தை வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழங்க அறிமுக இயக்குநர் வி.கர்ணன் அசோக் இயக்குகிறார். பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கவின், ஆன்ரியா தவிர்த்து பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் தொடங்கி நடைபெற்ற நிலையில் தற்போது இறுதிகட்டத்தில் உள்ளதாக படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் தெரிவித்துள்ளது.   


<!–
–>

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

–>

Advertisement