இலங்கை
வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது!

வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது!
பிரிட்டனுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
பிரிட்டனில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பிரிட்டனுக்கு அழைப்பதாகவும், இதற்கு முற்பணமாக யாழ்ப்பாணம் கம்பர்மலையில் வசிக்கும் தனது தாயாரிடம் 5 லட்சம் ரூபாவை வழங்குமாறும் கூறியுள்ளார்.
இதன்படி அந்த இளைஞரும், மேற்படி பெண்ணிடம் ஐந்து லட்சம் ரூபாவை வழங்கியதுடன், பிரிட்டனில் உள்ளவராலும், அவரின் தாயாராலும் கூறப்பட்ட திகதிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
இதன்பின்னரே அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து, யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய அந்த இளைஞர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.