சினிமா

CSK தோனியைப் போல விஜயை வெற்றி பெறச்செய்வேன்.. – பிரசாந்த் கிஷோர் அதிரடி கருத்து!

Published

on

CSK தோனியைப் போல விஜயை வெற்றி பெறச்செய்வேன்.. – பிரசாந்த் கிஷோர் அதிரடி கருத்து!

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஒரு புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோர், இந்திய அரசியல் தளத்தில் மிகவும் தாக்கமுள்ள நபர்களில் ஒருவர் இவர் தற்போது தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த தயாராக உள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், “தோனியை CSK வெற்றி பெறச் செய்தது போல, விஜயை அரசியல் களத்தில் வெற்றிக்கு அழைத்துச் செல்லுவேன்” என தெரிவித்தார். இந்த கூற்று, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சினிமாவில் பிரமாண்டமான வெற்றிகளைப் பெற்ற விஜய், தற்போது அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், பிரசாந்த் கிஷோர் த.வெ.க கட்சியின் 2வது ஆண்டு வெற்றி விழாவின் போது விஜயின் வெற்றிக்காக தான் நேரடியாகச் செயல்படுவதாக தெரிவித்திருக்கிறார்.மேலும் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது , “தோனியை CSK வெற்றி பெறச் செய்தது போல, விஜயை தமிழக அரசியலில் வெற்றி பெறச் செய்வேன் என்றதுடன்  அவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அதை ஒரு அமைப்பாக மாற்றி, வெற்றிக்காக செயல்படுத்தலாம்”. எனக் கூறினார்.அத்துடன் விஜய், தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் ஆதரவைக் கொண்டுள்ள நடிகர். ஆனால், அரசியல் என்பது வெறும் ரசிகர்களின் ஆதரவால் மட்டுமே வெற்றியை உறுதிப்படுத்த முடியாத ஒரு துறை. பிரசாந்த் கிஷோர், இதை நன்கு புரிந்து கொண்டிருப்பவர் என்பதால் அவர் முழுமையாகக் களமிறங்கி விஜயின் வெற்றிக்காக திட்டமிட்டுப் பணியாற்றவிருக்கிறார்.விஜயின் அரசியல் நுழைவு குறித்து பல எதிர்க்கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் இதை அவருக்கு சாதகமாக பார்ப்பதுடன்  சிலர் விஜயின் அரசியலுக்கு எதிராக கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். எனினும், பிரசாந்த் கிஷோரின் அனுபவம் மற்றும் அறிவு, விஜயை வெற்றிக்கு அழைத்து செல்லக்கூடியது எனப் பலரும் நம்புகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version