Connect with us

சினிமா

பெரிய ஹீரோக்களுக்கு வேடந்தாங்களாக மாறிய தயாரிப்பு நிறுவனம்.. அல்வா ஆஃபரில் மயங்கி போன சிம்பு சிவகார்த்திகேயன் 

Published

on

Loading

பெரிய ஹீரோக்களுக்கு வேடந்தாங்களாக மாறிய தயாரிப்பு நிறுவனம்.. அல்வா ஆஃபரில் மயங்கி போன சிம்பு சிவகார்த்திகேயன் 

கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுப்பது போல இப்பொழுது ஒரு தயாரிப்பு நிறுவனம்  பெரிய பெரிய ஹீரோக்களை எல்லாம் வளைத்து  தன்வசமாக்கியுள்ளது அதற்கு காரணம் இவர்கள் கொடுக்கும் பிரம்மாண்ட ஆபர்களும் நேர்த்தியான கணக்கு வழக்குகளும் தான்.

 சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் போன்றவர்களை  வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ளது அந்த தயாரிப்பு நிறுவனம். அதற்காக அவர்களுக்கு பல அல்வா  ஆஃபர்களை கொடுத்து வருகிறார்கள். இதனால் அவர்களும் எந்த ஒரு   சலசலப்பும் இல்லாமல் தொடர்ந்து கால் சீட் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement

 இவர்கள் மட்டும் இன்றி இந்த தயாரிப்பு நிறுவனம் ரஜினி மற்றும் சூர்யா இருவரிடமும்  பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.  சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறப்பவர்கள் டான்  பிக்சர்ஸ், இவர்கள்தான் இப்பொழுது  சினிமா தயாரிப்பில் மொத்த கோடம்பாக்கத்தையும் ஆட்சி செய்கிறார்கள்.

அடுத்து வரவிருக்கும்  இட்லி கடை, பராசக்தி, இதயம்  முரளி,எஸ் டி ஆர் 49  போன்ற படங்களை  இவர்கள்தான் தயாரிக்க இருக்கிறார்கள். இவர்களுடன் கூடிய விரைவில் விஜய் சேதுபதியும் ஒரு  படத்தில் இணைய உள்ளார். இதற்கெல்லாம் காரணம் ஹீரோக்களுக்கு  இவர்கள் கொடுக்கும் சலுகைகள் தான். 

 டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஹீரோக்களுக்கு ஆரம்பத்தில் ஒரு சம்பளத்தை கொடுத்து விடுகிறார்கள். அது போக படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்காக  கொடுக்கிறார்கள். இது இருவருக்கும் லாபகரமாகவே அமைகிறது. அதுமட்டுமின்றி கணக்கு வழக்குகளையும் இவர்கள் கரெக்டாக சமர்ப்பிக்கிறார்களாம். இதனால் ஹீரோக்களுக்கு சொர்க்க பூமியாக மாறி வருகிறது டான் பிக்சர்ஸ் நிறுவனம்..

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன