சினிமா
விலகியிருப்பது எல்லாம் முடிந்துவிட்டது!! சமந்தாவின் அதிரடி முடிவு..

விலகியிருப்பது எல்லாம் முடிந்துவிட்டது!! சமந்தாவின் அதிரடி முடிவு..
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் கால் பதித்து கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வந்து தற்போது உற்சாகமாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இந்நிலையில், சினிமாவில் விலகியிருப்பது குறித்து சமந்தா ஒருசில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் சமந்தா “இப்போது நான் ராஜ் மற்றும் டிகே-வின் ரக்த பிரஹ்மத் தொடரை முடிக்க வேண்டும்.அடுத்து மற்றொரு படம் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் தொடங்கிவிடும் என்பதால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் திரைப்பட உருவாக்கத்தில் விலகியிருப்பதெல்லம் முடிந்துவிட்டது. இதுதான் என் முதல் காதல்” என்று கூறியிருக்கிறார்.ஏற்கனவே பங்காரம் என்ற படத்தினை சமந்தா தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.