Connect with us

பொழுதுபோக்கு

ஒரே நடிகருக்கு மகளாக… காதலியாக… தாயாக… நடித்த மீனா: அந்த நடிகர் ரஜினி அல்ல; கண்டுபிடிங்க பார்ப்போம்!

Published

on

Meena Actress

Loading

ஒரே நடிகருக்கு மகளாக… காதலியாக… தாயாக… நடித்த மீனா: அந்த நடிகர் ரஜினி அல்ல; கண்டுபிடிங்க பார்ப்போம்!

ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னாளில் அவர்களுக்கே ஜோடியாக நடித்த நடிகை மீனா, ஒரு நடிகருக்கு மட்டும் மகளாகவும், காதலியாகவும், அம்மாவாகவும் நடித்துள்ளார். அந்த நடிகர் யார் தெரியுமா?Read In Malayalam: മമ്മൂട്ടിയുടെ മകളായും കാമുകിയായും അമ്മയായും അഭിനയിച്ച നടിയാണിത്; ആളെ മനസ്സിലായോ?குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, பின்னாளில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அஜித், சத்யராஜ், பிரபு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் மீனா. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மீனா, பல அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அதேபோல், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மீனா, எங்கேயே கேட்ட குரல் படத்தில் ரஜினிகாந்தின் குழந்தையாக நடித்திருப்பார். விஜயகாந்த் நடித்த பார்வையின் மறுபக்கம், சிவாஜி கணேசன் நடித்த சுமங்கலி, திருப்பம், சிவக்குமார் நடித்த, தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், மோகன் நடித்த உயிரே உனக்காக உள்ளிட்ட படங்களில் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்த மீனா, பின்னாளில், முத்து, எஜமான், வீரா உள்ளிட்ட சில படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல், பெரியண்ணா, உளவுத்துறை, உள்ளிட்ட சில படங்களில் விஜயகாந்துக்கு ஜோடியாகவும் நடித்துள்ள மீனா, ஒரே நடிகருக்கு, மகள், காதலி, தாய், என 3 கேரக்டர்களிலும் நடித்துள்ளார் மீனா. அந்த நடிகர் யார் தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டி தான்.1984 ஆம் ஆண்டு பி.ஜி. விஸ்வம்பரன் இயக்கிய ‘ஒரு கொச்சு கதை நெய்ய பரியாத கதை’ படத்தில் மீனா மம்மூட்டியின் மகளாக நடித்தார். அது உண்மையில் ஒரு மகள் அல்ல, என்றாலும், ஒரு மகளுக்கு சமமான கேரக்டரில் நடித்திருப்பார். இது குறித்து மீனா ஒரு பேட்டியில் கூறுகையில், ‘யாரும் சொல்லாத ஒரு சிறிய கதை’ பாடலின் ஒரு பகுதியை எனக்குக் காட்டி, இது எனக்கு நினைவிருக்கிறதா என்று என்னிடம் கேட்டார்கள். அப்போது எனக்கு நினைவில் இல்லை என்று சொன்னேன், ஆனாலும் அந்த காட்சி நன்றாக இருந்தது. இதில் என் தந்தையாக நடித்திருந்த மம்முட்டிக்கு பின்னாளில், நான் அவரின் தாயாக நடித்தேன். உண்மையைச் சொன்னால், இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது,” என்று மீனா கூறியுள்ளார்.பின்னர் ராட்சச ராஜா, கருட பக்ஷிகல், மற்றும் கதா பரியம்போல் போன்ற படங்களில் மம்முட்டியுடன் மீனா இணைந்து நடித்திருந்தார். இதில் ராட்சச ராஜா படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடித்திருந்த மீனா, மற்ற இரண்டு படங்களிலும் நாயகியாக இல்லாமல், முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த வகையில் ரஜினிகாந்துடன் மகளாகவும் காதலியாகவும் நடித்திருந்த மீனா, தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடனும் இதேபோல் நடித்துள்ளார்.2014-ம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான பால்யகலசகி படத்தில் மம்மூட்டியின் அம்மாவாக மீனா நடித்திருந்தார். படத்தின் மையக் கதாபாத்திரமான மஜீத் (மம்மூட்டி) தாயாக மீனா நடித்தார். மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இந்த படத்தின் மஜீப் தந்தை கேரக்டரிலும் மம்முட்டியே மீனாவின் கணவராகவும் நடித்திருப்பார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன