Connect with us

சினிமா

நடிப்பால் பாடல்கள் குறைந்து விட்டதா…? உண்மையை உடைத்த ஜி.வி. பிரகாஷ்!

Published

on

Loading

நடிப்பால் பாடல்கள் குறைந்து விட்டதா…? உண்மையை உடைத்த ஜி.வி. பிரகாஷ்!

தமிழ் திரைப்பட உலகில் இசை மற்றும் நடிப்பில் முன்னணியில் நிற்கும் நபராக ஜி.வி. பிரகாஷ் விளங்குகின்றார். முன்னணி இசையமைப்பாளராக திரையுலகில் பெயர் பெற்ற இவருக்கு தற்போது நடிகராகவும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஜி. வி. பிரகாஷ் கலந்த வீடியோ தற்பொழுது சமூக ஊடகத்தில் வெளியாகி உள்ளது.அந்த நேர்காணலில் நடுவர் இசை மற்றும் நடிப்பை சமநிலைப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஜி.வி. பிரகாஷ் உறுதியான பதில் ஒன்றினை அளித்துள்ளார். அதன் போது , “நான் இசை மற்றும் நடிப்புக்கு ஒரே நேரத்தில் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். எனக்கு பாடல்கள் குறைந்துவிட்டதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. இப்போதும் நான் தொடர்ந்து அதிகமான பாடல்களை பாடிக்கொண்டு இருக்கிறேன்,” என்றார்.மேலும் அவர் 2024 ஆண்டில் பல பாடல்களை வழங்கியுள்ளதாக கூறினார். குறிப்பாக, “அமரன், லக்கி பாஸ்கர், தங்கலான், மற்றும் காப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் வழங்கியுள்ளேன் என்றார். நான் என்னால செய்யக்கூடிய அளவிற்கு அதிகம் பாடல்களை வழங்கிக் கொண்டு இருக்கிறேன்,” என்று அவர் விளக்கமாக கூறினார்.மேலும், “ஒரு பாடகராக, நான் மூன்று மாதத்திற்கு ஒரு பாடலை உருவாக்குகிறேன். இது ஒரு விதமான திட்டமிடப்பட்ட வேலை. ஒவ்வொரு பாடலையும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதைப் போல தரமானதாக வழங்க விரும்புகிறேன். அதனால் ஒவ்வொரு பாடலுக்கும் எனது முழு கவனத்தையும் செலுத்துகிறேன்,” என்றார்.அத்துடன் “நான் நடிப்பிலும், இசையிலும் சமநிலையைப் பேணி வருகிறேன். ஏற்கனவே பல படங்களுக்கு இசை வழங்கியுள்ளேன். அதே நேரத்தில் நடிகராகவும் பல்வேறு வெற்றிப்படங்களில் பணியாற்றி வருகிறேன். இரண்டும் ஒரே நேரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்,” என்று அவர் கூறியுள்ளார். மேலும் தான் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன