திரை விமர்சனம்
மர்ம பங்களாவில் நடக்கும் அமானுஷ்யம்.. ஜீவாவின் அகத்தியா எப்படி இருக்கு.? விமர்சனம்

மர்ம பங்களாவில் நடக்கும் அமானுஷ்யம்.. ஜீவாவின் அகத்தியா எப்படி இருக்கு.? விமர்சனம்
இயக்கத்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இன்று வெளியாகி இருக்கிறது. ஃபேண்டஸி அமானுஷ்யம் கலந்து உருவாகி இருக்கும் இப்படம் எப்படி இருக்கு என ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
கலை இயக்குனராக இருக்கும் ஜீவா தன் முதல் படத்திற்காக சொந்த செலவில் செட் போடுகிறார். ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக அந்த படம் பாதியிலேயே டிராப் ஆகிவிடுகிறது.
இதனால் அவர் மனம் உடைந்து போகிறார். அப்போது ராஷி கண்ணா இந்த செட்டை அப்படியே ஸ்கேரி ஹவுஸ் போல் மாற்றி சம்பாதிக்கலாம் என ஐடியா கொடுக்கிறார்.
அதை அடுத்து ஜீவாவும் அந்த முயற்சியில் இறங்கி சம்பாதிக்கிறார். ஆனால் அந்த ஸ்கேரி ஹவுஸில் சில மர்மமான விஷயங்கள் நடக்கின்றது.
அந்தத் தேடலில் இறங்கும் ஜீவா 1940 காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை கண்டுபிடிக்கிறார். அந்த அமானுஷ்யம் என்ன? மர்ம பங்களாவில் என்ன நடக்கிறது? என்பதுதான் படத்தின் கதை.
பொதுவாக பேய் படங்களில் லாஜிக் பார்க்க முடியாது. அதே போல் தான் இப்படத்திலும் பல இடங்களில் லாஜிக் மீறல் வெளிப்படையாக தெரிகிறது.
அம்மா மீது பாசத்தில் இருக்கும் ஜீவா அவருடைய நோயை குணப்படுத்த முயல்வதும். அதற்காக அவர் எடுக்கும் ரிஸ்க் என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
அதேபோல் சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் தனக்கான வேலையை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். ராஷி கண்ணா வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார்.
அதேபோல் ஒளிப்பதிவு, இசை, கிராபிக்ஸ் காட்சிகள், கிளைமாக்ஸ் என அனைத்துமே படத்திற்கு மிகப்பெரும் பிளஸ் ஆக இருக்கிறது.
ஆனால் தடுமாறும் திரைக்கதை, காமெடி, முதல் பாதி என சில மைனஸ் இருக்கிறது. இருந்தாலும் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங் : 2.5/5