Connect with us

விளையாட்டு

ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து? தென் ஆப்ரிக்காவுடன் இன்று மோதல்

Published

on

england vs south africa live cricket score champions trophy 2025 11th match eng vs sa live scorecard updates karachi Tamil News

Loading

ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து? தென் ஆப்ரிக்காவுடன் இன்று மோதல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் டிராபியில் ‘ஏ’ பிரிவில் உள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. மறுபுறம், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து அரையிறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது. அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா மட்டும் தகுதி பெற்றுள்ளது. இதனால், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.தென் ஆப்ரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதல் இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சி தேசிய மைதானத்தில் அரங்கேறும் 11-வது லீக் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன