Connect with us

விளையாட்டு

IND vs NZ Champions Trophy 2025 Live Score: இந்தியாவுடன் மோதும் நியூசிலாந்து; குரூப் ஏ பிரிவில் முதலிடம் யாருக்கு?

Published

on

ind vs nx ct25

Loading

IND vs NZ Champions Trophy 2025 Live Score: இந்தியாவுடன் மோதும் நியூசிலாந்து; குரூப் ஏ பிரிவில் முதலிடம் யாருக்கு?

IND vs NZ Champions Trophy 2025 Live Score: துபாயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தின் முடிவு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா உடனான அரையிறுதிப் போட்டிகளை உறுதிசெய்யும்.உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற போட்டிகளில் இரு அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் நியூசிலாந்து 10 முறையும், இந்தியா 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் உலகளாவிய போட்டிகளில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா எப்போதும் மோசமான சாதனையைப் பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவை நியூசிலாந்து தோற்கடித்துள்ளது, அதேநேரம் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. கடந்த ஆண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. ஆனால் இந்த இரு அணிகளும் கடைசியாக 50 ஓவர் ஐ.சி.சி போட்டியில் சந்தித்தபோது, 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் ரோஹித் அண்ட் கோ நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன