சினிமா
உடல்நிலை மோசமான நிலை!! மகன்களால் கைவிடப்பட்ட நடிகை!! ஓடிவந்து உதவிய KPY பாலா..

உடல்நிலை மோசமான நிலை!! மகன்களால் கைவிடப்பட்ட நடிகை!! ஓடிவந்து உதவிய KPY பாலா..
80, 90களில் நடித்து பிரபலமான நடிகைகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி அந்த காலத்தில் காமெடி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஒருவர் மகன்களால் கைவிடப்பட்டு சாப்பாட்டு வழியில்லாமல் இருக்கிறார்.நகைச்சுவையில் 80களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை பிந்து கோஷ். தற்போது உடல்நிலை சரியில்லாமல் பல பிரச்சனைகளை சந்தித்து, மருத்துவ செலவிற்கும் சாப்பிட பணம் இல்லை என்று நடிகை ஷகீலா அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்திருந்தார் பிந்து கோஷ்.இந்நிலையில் இதை கேள்விப்பட்ட KPY பாலா உடனே அவரை தொடர்பு கொண்டு உதவி செய்ய முன்வந்துள்ளார். பலருக்கு பல உதவிகளை செய்து வரும் KPY பாலா, பிந்து கோஷுக்கு ரூ. 80 ஆயிரம் தொகையை கொடுத்து உதவி செய்திருக்கிறார்.