நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 03/03/2025 | Edited on 03/03/2025

பிவி ஃப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில் ஒரு படம் உருவாகிறது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமூக பிரச்சனை ஒன்றை, காதலும் திரில்லரும் கலந்து,  கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கவுள்ளதாக சொல்கிறார். 

இப்படத்தில் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்கு, தனது பாராட்டுக்களை தெரிவித்து, படக்குழுவினரை வாழ்த்தினார்.

Advertisement

இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் போன்ற இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பங்குபெறும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூரவமாக வெளியாக இருக்கிறது.