இந்தியா
இலங்கைச் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களை உடன் விடுவியுங்கள்

இலங்கைச் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களை உடன் விடுவியுங்கள்
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்றுத் திருவோடு ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 24ஆம் திகதிமுதல் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது போராட்டத்தின் ஒரு பகுதியாகவே, அவர்கள் நேற்றுத் திருவோடு ஏந்திப் போராடியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற வாக்குறுதியையும் தமிழக மீனவர்களிடத்தில் ஆளுநர் ரவி வழங்கியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும், போராட்டத்தைக் கைவிடுமாறு மீனவர்களைக் கோரியுள்ள போதிலும், மீனவர்கள் அதற்கு உடன்படவில்லை. காலவரையறை அற்றமுறையில் தமது போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர். (