Connect with us

இலங்கை

எனது அம்மா அப்படி செய்யவில்லை; பாடகி கல்பனா மகள் வேண்டுகோள்!

Published

on

Loading

எனது அம்மா அப்படி செய்யவில்லை; பாடகி கல்பனா மகள் வேண்டுகோள்!

  எனது அம்மா கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லை, மனஅழுத்தம் காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரையின் வீரியம் தான் காரணம் என பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா மகள் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எனவே தயவு செய்து இந்த விவகாரத்தை திசை திருப்ப வேண்டாம் எனவும் கல்பனா மகள் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமா பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

பாடகி கல்பனா ஹைதராபாத்தின் நிஜாம்பேட் பகுதியில் அவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாகவே அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவருக்கு போன் செய்தபோதும் அவர் போனை எடுக்காததால் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.விரைந்து வந்த பொலிஸார் கதை உடைத்து பார்த்தபோது கல்பனாவை மயங்கிய நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில் , கல்பனா மகள் அதனை மறுத்ததுடன் , மாத்திரையின் வீரியம் தான் தாயின் மயக்கத்திற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன