இலங்கை
கச்சதீவுப் பெருவிழாவில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் குவிவார்கள்!

கச்சதீவுப் பெருவிழாவில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் குவிவார்கள்!
கச்சதீவுப் பெருவிழாவில் இம்முறை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்தத் திருவிழாவுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முற்பதிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துமீறிய மீன்பிடிப் பிரச்சினைகள் காரணமாக, கடந்த வருடம் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வதை இந்திய மீனவர்கள் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.