இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை; 12 இலட்சம் ரூபாய் சன்மானம் அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை; 12 இலட்சம் ரூபாய் சன்மானம் அறிவிப்பு
இலங்கை பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பெண் சந்தேகநபர் தலை மறைவாகியுள்ளார்.
பெண் சந்தேகநபர் கைது செய்வதற்கு உண்மையான தகவல்களை பொதுமக்களை வழங்குமாறு கோரி பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தகவல்களை பின்வரும் எண்களுக்குத் தெரிவிக்கலாம்:
பணிப்பாளர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (CCD): 071-8591727
பொறுப்பதிகாரி (OIC), கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (CCD): 071-8591735