இலங்கை
சுங்கத்தில் முறைக்கேடுகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி!

சுங்கத்தில் முறைக்கேடுகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி!
இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025 வரவு செலவுத் திட்டம் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை சுங்கத் துறையின் மூத்த அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
சுங்கத் துறையில் காணப்படும் திறமையின்மை, மோசடி, ஊழல் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கு தீர்வாக, துறை சார்ந்த செயல்பாடுகளை விரைவுபடுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை திறம்பட வழங்குவதற்கான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திணைக்களத்திற்கான புதிய மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது, மேலும் இலங்கை சுங்கத்திற்குள் உள்ள முறைகேடுகளை அகற்ற கடுமையான சட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மனிதவள மேலாண்மை, புதிய ஆட்சேர்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுபடுத்துவது குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கடந்த ஆண்டு சுங்கத்துறை அடைந்த வருவாய் இலக்குகளை ஜனாதிபதி பாராட்டினார். இந்த ஆண்டு இலக்கு வருமானத்தை அடைய சுங்கத் துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்