இந்தியா
செல்ல பூனை இறந்த துக்கம் – காத்திருந்து தற்கொலை செய்த பெண்!

செல்ல பூனை இறந்த துக்கம் – காத்திருந்து தற்கொலை செய்த பெண்!
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உயிரிழந்த செல்ல பூனை, திரும்ப உயிர் பெற்று வந்து விடும் என நம்பி பெண் ஒருவர் 2 நாட்களாக காத்திருந்து பின்னர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹசன்பூர் நகரில் வசித்து வந்தவர் பெண்ணொருவர், விவாகரத்து பெற்ற நிலையில், தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
தனிமையை போக்க, செல்ல பிராணியாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார்.
அதற்கு ஆடைகளை அணிவித்து, பாதுகாப்பாக வளர்த்து மகிழ்ந்திருக்கிறார். இந்நிலையில், அண்மையில் அந்த பூனை இறந்து விட்டது.
அப்போது அதனை அடக்கம் செய்து விடலாம் என தாய் கூறியுள்ளார். ஆனால், அது உயிர் பெற்று திரும்பி வந்து விடும் என கூறி அதற்கு மறுத்து விட்டார்.
2 நாட்களாக பூனையின் உடலை உடன் வைத்திருக்கிறார். அவருடைய தாயார் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் கூறியும் பிடிவாதத்துடன் இருந்துள்ளார்.
இந்நிலையில், 3-வது நாளன்று மதியம் வீட்டின் 3-வது தளத்தில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். யாரும் அவரை தேடவில்லை.
இரவு 8.00 மணியளவில் தாய் அறைக்கு சென்ற போது, அவர் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில், காணப்பட்டுள்ளார்.
இறந்த பூனை, அவருக்கு பக்கத்தில் தரையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் கத்தி, கூச்சல் போட்டுள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, நிலைமையை கவனித்து பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
பொலிஸார் சம்பவ பகுதிக்கு சென்றனர். தடயவியல் குழுவினரும் சென்று தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. செல்ல பிராணியாக வளர்த்த பூனை உயிரிழந்த துக்கத்தில், அது திரும்ப உயிருடன் வந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த பூஜா, 3-வது நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.