Connect with us

இலங்கை

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!

Published

on

Loading

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

செவ்வாழை பழங்களில் பல நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிக்க உதவியாக உள்ளது.
செவ்வாழைப் பழத்தின் பயன்கள்,

Advertisement

குதிகால் வலியை நீக்குவது முதல் உடலுக்கு ஆற்றலை அளிக்க செவ்வாழை பழம்.

 நம்மில் பலருக்கு தூங்கி எழுந்ததும் கால்களை ஊன்றக்கூட முடியாத அளவிற்கு அதிக வலியை சில நேரங்களில் உணர்ந்திருப்போம்.

இதோடு நீண்ட நேரம் நிற்கவும், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமத்தைச் சந்திப்போம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு முக்கியமானக் காரணமாக அமைகிறது.

Advertisement

குறைந்த கலோரிகள் மற்றும் அதிகளவு நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ள செவ்வாழை உட்கொள்ளும் போது, நீண்ட நேரம் பசி உணர்வை ஏற்படுத்தாது. அதிக ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதையும் தவிர்க்க முடியும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பவர்கள் எவ்வித தயக்கம் இன்றி செவ்வாழை பழங்களைச் சாப்பிடலாம்.

செவ்வாழை பழத்தில் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கும்.

Advertisement

செவ்வாழை பழங்களில் குறைந்த கிளைசெமிக் பண்புகளைக் கொண்டுள்ளதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்றாக உள்ளது. இவற்றைத் தினமும் உட்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்கள் வைத்திருக்கும்.

செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.  செவ்வாழைப் பழம் சருமத்தில் உள்ள குருதி சுற்று இயக்கத்தை மேம்படுத்துகிறது.

இதில் 75% நீர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.

Advertisement

செவ்வாழை பழங்கள் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

தினமும் வாழைப்பழங்களை உட்கொள்ளும் போது சருமத்தில் உள்ள துளைகளைச் சுத்தம் செய்து முகத்தை பளபளப்பாக்குகிறது. 

செவ்வாழையில் 75 சதவீதத்திற்கு அதிகமாக நீர்ச்சத்துக்கள் உள்ளதால், சருமம் எளிதில் வறண்டு விடுவதையும் தடுக்க உதவுகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன