Connect with us

உலகம்

பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் – 12 பேர் மரணம்

Published

on

Loading

பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் – 12 பேர் மரணம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த ராணுவ தளத்தின் சுவர் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 கார்களை மோதி வெடிக்க வைத்தனர். சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் மற்ற தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

Advertisement

காரில் நிரப்பப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

ராணுவ தளத்துக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல் பர்சன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பிரிவுகளில் ஒன்றாகும்.

Advertisement

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741192399.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன