டி.வி
மாஸ் லுக்கில் அசத்தும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்..! பின்னணி நோக்கம் என்ன தெரியுமா..?

மாஸ் லுக்கில் அசத்தும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்..! பின்னணி நோக்கம் என்ன தெரியுமா..?
பிக்பாஸ் சீசன் 8 இன் டைட்டில் வின்னரான முத்து குமரன் தமிழ் பற்று அதிகம் கொண்டவர். இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரே தனது அழகிய தமிழ் பேசும் திறமையினால் ரசிகர்களை கவர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் அழகாக விளையாடி டைட்டில் வின்னர் எனும் பட்டத்தையும் வேண்டி சென்றார். இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நடிகர் தீபக் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து வரும் இவர் சமீபத்தில் வித்தியாசமாக மாறியுள்ளார்.பிக்பாஸ் வீட்டிற்குள் பல இடங்களில் நான் ஒரு பெரிய நடிகனாக வரவேண்டும் என கனவோடு இருந்து வந்த இவர் வெளியில் வந்து ஒரு சில மாதங்கள் அதற்கான ஒரு சில வேலைகளை ஆரம்பித்து விட்டாரா ? என பேசும் அளவிற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.இந்த நிலையில் தான் தற்போதும் ஒரு சில போட்டோ சூட் படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஹீரோ லுக்கில் போஸ்ட் கொடுத்து அசத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “அம்மாவ சுத்தி போடா சொல்லுங்க நிறைய கெட்ட கண்ணுங்ள் உங்களை சுத்தி இருக்குது” என கமெண்ட் செய்துள்ளனர். புகைப்படங்கள் இதோ..