உலகம்
மூன்று தசாப்தங்களின் பின்னர் ஜப்பானில் மிகப்பெரிய காட்டுத் தீ!

மூன்று தசாப்தங்களின் பின்னர் ஜப்பானில் மிகப்பெரிய காட்டுத் தீ!
மூன்று தசாப்தங்களின் பின்னர் ஜப்பானில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை முதல் வடக்கு ஜப்பானிய நகரமான ஒஃபுனாடோவைச் சுற்றி 5,200 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர் தீப்பரவலினால் 4,600 பேர் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை 80 கட்டடங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.
டோக்கியோ உட்பட 14 மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.