இலங்கை
வடக்கு மாகாணத்தை ஆளப்போகின்றேன்; அருச்சுனா எம்.பி

வடக்கு மாகாணத்தை ஆளப்போகின்றேன்; அருச்சுனா எம்.பி
இலங்கையின் வடக்கு மாகாணத்தை தான் ஆட்சி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா தெரிவித்ததோடு , தனது கருத்துக்களை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தான் ஒரு கட்சித் தலைவர் என்றும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தை நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாள் வெட்டு கும்பல்கள் , தனது பகுதிகளில் உள்ள மக்களை துண்டு துண்டாக வெட்டுகிறார்கள் என்றும், அவற்றை நாடாளுமன்றத்தில் சொல்ல வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா தெரிவித்தார்.