இலங்கை
111 தொலைபேசிகளுடன் சிக்கிய தொழிலதிபர்!

111 தொலைபேசிகளுடன் சிக்கிய தொழிலதிபர்!
சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற 28 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து வந்த சந்தேகநபர், மூன்று சூட்கேஸ்களில் பல்வேறு மாடல்களில் 111 கையடக்கத் தொலைபேசிகளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.