Connect with us

சினிமா

ஒரு நாளைக்கு ரூ. 50-க்கு அந்த வேலை!! இப்போ கோடியில் புரளும் அந்த நடிகை யார் தெரியுமா?

Published

on

Loading

ஒரு நாளைக்கு ரூ. 50-க்கு அந்த வேலை!! இப்போ கோடியில் புரளும் அந்த நடிகை யார் தெரியுமா?

1997ல் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை தான் நடிகை ராக்கி சாவந்த். கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்த ராக்கி சாவந்த், எது செய்தாலும் இணையத்தில் டிரெண்ட்டாகிவிடும்.கடந்த 2019ல் வெளிநாட்டு இந்தியர் ஒருவரி திருமணம் செய்து சில கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இதன்பின் தன்னைவிட 12 வயது குறைவான அடில்கான் தூரணி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.ராக்கியின் தாய் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சம்பத்தில் ஐசியூவில் இருவரும் திருமணத்தை செய்தனர். திருமணமாகி ஒரு மாதத்தில் தன்னை அடுத்து துன்புறுத்துவதாக ராக்கி சாவந்த் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.இதன்பின் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த ராக்கி சாவந்த், தனது 10 வயதில் வேலை செய்து வந்துள்ளார். மும்பையில் உள்ள கேட்டரிங் சர்வீசில் உணவு பரிமாறும் வேலை செய்ததாகவும் அதற்கான ஒரு நாளை ரூ. 50 சம்பளமாக வாங்கியதாகவும் கூறியிருக்கிறார்.மேலும், குடும்பத்திற்கு சினிமா பிடிக்காமல் போனதாகவும் எதிர்ப்பை தாண்டி சினிமாவில் கால் பதித்ததாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், படத்தில் நடிக்க வைக்க யாரும் முன்வரவில்லை என்பதால் உடல் மற்றும் முக அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார் ராக்கி.அக்னிசக்கரா என்ற படத்தில் அறிமுகமான ராக்கி சாவந்தின் இன்றைய சொத்து மதிப்பு ரூ. 40 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன