Connect with us

பொழுதுபோக்கு

‘தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; தவறுதலாக அதிக மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன்’: பாடகி கல்பனா விளக்கம்

Published

on

Singer Kalpana

Loading

‘தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; தவறுதலாக அதிக மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன்’: பாடகி கல்பனா விளக்கம்

பிரபல பின்னணி பாடகி கல்பனா, தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.பாடகி கல்பனா தற்போது தெலங்கானா மாநிலம், ஹைதரபாத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது வீட்டின் கதவு திறக்கப்படாதது குறித்து சந்தேகமடைந்த காவலாளி, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அவரது வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்ததில், கல்பனா சுய நினைவின்றி இருந்தது தெரியவந்தது. அவரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனால் பாடகி கல்பனா, தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவத் தொடங்கியது. இது தொடர்பாக போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சூழலில் சுயநினைவுக்கு திரும்பிய கல்பனா, தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.அதன்படி, “தூக்கமின்மை காரணமாக, அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன். மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவை விட, அதிக தூக்க மாத்திரைகளை தவறுதலாக எடுத்துக் கொண்டதால் தான் வீட்டில் மயங்கி விழுந்தேன். நான், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” என வாக்குமூலம் அளித்துள்ளார்.பிரபல பின்னணி பாடகர் டி.எஸ் ராகவேந்திராவின் மகளான கல்பனா, கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்டார் சிங்கர் மலையாளம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். இசையுலகின் ஜாம்பவான்களான இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து கல்பனா பணியாற்றியுள்ளார்.தனது 5 வயதில் இசை உலகில் பயணத்தை தொடங்கிய கல்பனா, சுமார் 1,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். மேலும், கடந்த 1986-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்திலும் கல்பனா நடித்துள்ளார். பிக்பாஸ் தெலுங்கு சீசன் 1 நிகழ்ச்சியிலும் கல்பனா கலந்து கொண்டார்.முன்னதாக, கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் இடம்பெற்ற ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலமாக திரைத்துறையில் தனது இசை பயணத்தை கல்பனா தொடங்கினார். சமீபத்தில், மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கொடி பறக்குற காலம்’, 36 வயதினிலேயே திரைப்படத்தில் இடம்பெற்ற ‘போகிறேன்’ ஆகிய பாடல்களை கல்பனா பாடியுள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன