Connect with us

சினிமா

நடிகைகளை ஏன் கடவுளாக கொண்டாடுகிறார்கள்..? நிகிலா விமலின் உருக்கமான பதிவு!

Published

on

Loading

நடிகைகளை ஏன் கடவுளாக கொண்டாடுகிறார்கள்..? நிகிலா விமலின் உருக்கமான பதிவு!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை வென்ற நடிகை நிகிலா விமல், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமாவை பற்றிய தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவருடைய இந்தக் கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.நிகிலா விமல் தமிழ் சினிமாவை பற்றி பேசியபோது, “தமிழ் சினிமாவில் தான் அதிக சம்பளம் கொடுக்கின்றனர்” என்று கூறினார்.அத்துடன் தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள நிகிலா, தனக்கும் அதே அனுபவம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.மேலும், தமிழ் சினிமாவில் தான் நடிகைகளை “கடவுள் போல பில்டப் செய்கின்றனர்” என்று கூறினார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதுடன் அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்துக்கும் மக்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையும் அவர் கூறினார்.ஆனால் மலையாளத்தில் இது மாதிரி எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் அங்கு நடிகர்களும், நடிகைகளும் சாதாரணமாக நடத்தப்படுகிறார்கள் என்றார். மலையாள திரைத்துறையில் பணம் அதிகம் வழங்கப்படுவதில்லை ஆனால் தரமான படைப்புகள் தயாரிக்கப்படுகின்றன என உணர்வுபூர்வமாக கூறினார். மலையாள படங்களில் கதைக்குத் தான் முக்கியத்துவமே தவிர நடிகைகளுக்கு இல்லை என்றார். நிகிலா விமல் கூறிய கருத்துக்கள் தமிழ் மற்றும் மலையாள திரையுலக வித்தியாசங்களை வெளிப்படுத்துகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன