Connect with us

சினிமா

மருத்துவ உதவி கேட்கும் துள்ளவதோ இளமை பட நாயகன்.. இப்படி ஒரு வியாதியா?

Published

on

Loading

மருத்துவ உதவி கேட்கும் துள்ளவதோ இளமை பட நாயகன்.. இப்படி ஒரு வியாதியா?

கடந்த 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன துள்ளுவதோ இளமை படம் தனுஷ் மற்றும் செல்வராகவன் என்ற இரண்டு நம்பிக்கை நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது.

தனுஷ் உடன் சேர்ந்து நடித்த நிறைய புது முகங்களில் அபிநய் மற்றும் ஷெரின் ஓரளவுக்கு மக்களுக்கு பரீட்சையமானார்கள்.

Advertisement

இதில் அபிநய் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலை காட்டி வந்தார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் இவர் கவனிக்கப்படும் கேரக்டர்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு அபிநய் பற்றி மீடியாவில் பெரிய அளவில் எந்த செய்திகளும் வெளிவந்தது கிடையாது. இந்த நிலையில் இவர் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது.

உருவத்தில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். மருத்துவமனை படுக்கையில் சிகிச்சையில் இருந்து கொண்டே வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

Advertisement

அந்த வீடியோவில் தனக்கு இன்னும் சிகிச்சைக்காக 38 லட்சம் தேவைப்படுவதாகவும் அதற்கு உதவும் மாறும் கேட்டிருக்கிறார்.

தன்னுடன் முதல் படத்தில் இணைந்த நடித்த அபிநய்க்காக தனுஷ் உதவுவார் என ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன