இந்தியா
தொகுதி மறு வரையறைக்கு ஸ்டாலின் போர்க்கொடி: பொறுத்திருந்து பார்க்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகள்

தொகுதி மறு வரையறைக்கு ஸ்டாலின் போர்க்கொடி: பொறுத்திருந்து பார்க்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகள்
இந்தியா முழுவதும் மக்களை உறுப்பினர்களுக்கான தொகுதிகளை மத்திய அரசு மறுவரையறை செய்ய உள்ளதாக வெளியாகியள்ள தகவலுக்கு, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதே வேளையில், இந்திய கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எச்சரிக்கையுடன் இதனை கண்காணித்து வருகின்றன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: As DMK draws red line over delimitation, INDIA allies adopt ‘wait and watch’ strategyஇந்திய அளவில் தனது ஆதிக்கத்தைக் கொண்ட எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், தற்போதுவரை தொகுதி மறுவரையறை குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை, அதே சமயம், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள அக்கட்சியின் முதலமைச்சர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமையின் முடிவு என்ன என்பது குறித்த கேள்வி பரவலாக எழுந்துள்ளது.இந்தியாவில் தற்போது காங்கிரஸ் கட்சி, 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது, இதில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டும் தென்னிந்திய மாநிலங்கள். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறும் கேரள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற அக்கட்சி தற்போது தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயம், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில், பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வருகிறது. மேலும் தற்போது மக்களைவையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் 99 தொகுதிகளில் 40 தொகுதிகளில், தென்னிந்திய மாநிலங்களில் இருந்து கிடைத்தது. இதனால் தென்னிந்தியாவில், காங்கிரஸ் கட்சி, தனது தளத்தைத் தக்கவைத்து வளர்ப்பது கட்சிக்கு மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில், 2014 மற்றும் 2019 தேர்தல்களில் இந்தி பேசும் பகுதிகளில் தோல்வியை சந்தித்த அக்கட்சி, பிறகு, 2024 மக்களவைத் தேர்தல்களில் மீண்டும் எழுச்சி பெற்றி, சில பகுதிகளில் பெரிய வெற்றியை பெற்றது.எல்லை நிர்ணயப் பிரச்சினையை புவியியல் ரீதியாக மட்டுமே வடிவமைத்து வட மாநிலங்களை அந்நியப்படுத்த முடியாது. அதனால்தான், தற்போதைக்கு, காங்கிரஸ் முதல்வர்களான கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் அவரது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் தொகுதி மறுவரையறை குறித்து தென் மாநிலங்களின் அச்சங்களை வெளிப்படுத்த அவர்களை அனுமதிப்பதில் காங்கிரஸ் வசதியாகத் தெரிகிறது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையும் என்பதே அவர்களின் வாதமாக உள்ளது.இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பின்னரே தொகுதி மறுவரையறை குறித்து முடிவு செய்ய வேண்டும். கட்சி இப்போது எந்த நிலைப்பாட்டையும் எடுக்கத் தேவையில்லை என்று தெரிவித்தனர். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்தது.இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், நரேந்திர மோடி அரசாங்கம் கொண்டு வரும் மசோதாவின் நுணுக்கங்களைப் பார்ப்போம்… எப்படியிருந்தாலும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு அதெல்லாம் (தொகுதி மறுவரையறை) நடக்கும். இப்போது ஏன் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? நமது கர்நாடகா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அவ்வாறு செய்ய சுதந்திரமாக உள்ளனர், ”என்று கூறியுள்ளார்.இந்திய கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள், குறிப்பாக வடமாநிலங்களை தளமாகக் கொண்ட கட்சியகள்,, மக்களவைத் தொகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு தற்போதைய நிலையைப் பராமரிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கோரிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்கின்றனர். உதாரணமாக, தொகுதி மறுவரையறை உடனடியாகத் தொடங்குவதற்கு ஆர்ஜேடி கட்சி ஆதரவளிக்கவில்லை, ஆனால் மக்கள் தொகை மட்டுமே அளவுகோலாக இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.இந்த தொகுதி மறுவரையரைற காரணமாக வட மாநிலங்களுக்கு 100 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சியடையும் ஒரு பொதுவான வட இந்திய அரசியல்வாதியாக நான் பேச முடியாது. அது நாட்டின் நலனுக்காக இருக்காது. “மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, 30 ஆண்டுகளுக்கு எல்லை நிர்ணயத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, மக்கள் தொகை மட்டுமல்ல, பிற அளவுகோல்களையும் உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட மறுவரையறை தரநிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் உறுதியான கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும்,” வரையறை நிர்ணயம் “தேசத்தைக் கட்டியெழுப்பும் யோசனைக்கு” எதிரானதாக இருப்பதை ஆர்ஜேடி விரும்பாது என்று என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) வட்டாரங்கள், இந்த விஷயத்தில் கட்சி இன்னும் ஒரு கருத்தை எடுக்காததால், இப்போது சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளன. அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மௌனம் காத்து வருகிறது, ஆனால் அதன் தலைவர்களில் ஒருவர், ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தொகுதி மறுவரையறை மற்றும் மும்மொழி கொள்கை போன்ற பிரச்சினைகளில் குரல் எழுப்புவதாகக் கூறி வருகின்றனர்.இது குறித்து டிஎம்சி தலைவர் ஒருவர் கூறுகையில், இது அவரது (ஸ்டாலினின்) அரசியலுக்குப் பொருந்தக்கூடும். எனவே, அவர் பேசுகிறார். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (எபிக்) எண் சர்ச்சை மற்றும் பிற முறைகேடுகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஸ்டாலினின் ஆக்ரோஷத்திற்குப் பின்னால் இந்திய உள் கூட்டணி இயக்கவியல் செயல்படுவதையும்” மம்தா பானர்ஜியை கூட்டணித் தலைவராக நியமிப்பதற்கு ஆதரவாக பல இந்தியக் கட்சிகள் வெளிப்படையாகக் குரல் கொடுத்திருப்பது ஸ்டாலினை “குழப்பமடைய செய்திருக்கலாம் என்று அவர் கூறினார்.தொகுதி மறுவரையறை குறித்த பாஜகவின் நிலைப்பாட்டின் முதல் அறிகுறி கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு எந்த அநீதியும் ஏற்படாது கூறியிருந்தார். தொகுதி மறுவரையறைக்கு பிறகு, விகிதாச்சார அடிப்படையில், எந்த தென் மாநிலத்தின் ஒரு இடமும் குறையாது என்று மோடி அரசாங்கம் மக்களவையில் தெளிவுபடுத்தியுள்ளது,” என்று கோயம்புத்தூரில் நடந்த பாஜக நிகழ்வின் போது அமித் ஷா கூறினார். அதன் பின்னர், இந்த விஷயத்தில் மீண்டும் ஒரு உரையாடல் நடந்துள்ளது.நேற்று முன்தினம் (மார்ச் 5) சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மோடி “1971 மக்கள்தொகை அடிப்படையிலான இட ஒதுக்கீடு மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும், அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றும் நாடாளுமன்றத்தில் தெளிவான உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். 1977 மக்களவையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு எம்.பி.யும் சராசரியாக 10.11 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆனால் இந்த எண்ணிக்கை எழுத்தில் குறிக்கப்படவில்லை.அதே எண்ணிக்கை தக்கவைக்கப்பட்டால், மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக மக்களவையின் பலம் கிட்டத்தட்ட 1,400 இடங்களாக விரிவுபடுத்தப்பட வேண்டும். 10.11 லட்சம் சராசரி மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டால், உத்தரப் பிரதேசம் (1977 எல்லைகளின்படி உத்தரகண்ட் உட்பட) கீழ்சபையில் அதன் தற்போதைய பங்கான 85 இடங்கள் 250 இடங்களாக அதிகரிக்கும்.பீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 54 இலிருந்து 169 ஆக மூன்று மடங்கு அதிகரிக்கும். அதேபோல், ராஜஸ்தானின் எண்ணிக்கை 25-ல் இருந்து 82 ஆக உயரும். தமிழ்நாட்டின் பங்கு 39-ல் இருந்து 76 ஆக உயரும், இது இரண்டு மடங்குக்கும் குறைவு. அதேபோல். கேரளாவின் எண்ணிக்கை 20-ல் .ருந்து 36 ஆக உயரும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்கள்தொகையை 20 லட்சமாக நிர்ணயித்தால், மக்களவைக்கு இப்போது உள்ள 543 இடங்களுடன் ஒப்பிடும்போது 707 இடங்கள் கிடைத்தால், தென் மாநிலங்கள் கடுமையான பாதகமாக இருக்கும்.இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் இடங்கள் அப்படியே இருக்கும்: .ஆனால் கேரளா இரண்டு இடங்களை இழந்து 18 இடங்களுடன் முடிவடையும். மாறாக, உ.பி. (உத்தரகண்ட் உட்பட) இன்னும் 126 அதிகரிக்கும். அதே போல் பீகார் மற்றும் ஜார்க்கண்டில் 85 இடங்களும் இருக்கும். ஒரு தொகுதிக்கு சராசரியாக 15 லட்சம் மக்கள் தொகை இருந்தாலும், மக்களவை இடங்களின் எண்ணிக்கை 942 ஆக உயரும், தென் மாநிலங்கள் அவற்றின் வடக்கு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பாதகமாக இருக்கும். இந்த திட்டம் இருந்தால் தமிழ்நாட்டிற்கு 52 இடங்களையும், கேரளாவிற்கு 24 இடங்களையும் கொடுக்கலாம். ஆனால் உ.பி. (உத்தரகண்ட் உடன் சேர்த்து) 168 இடங்களைப் பெறும், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் 114 இடங்களைப் பெறும்.இது குறித்து நேற்று (மார்ச் 06) காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, ஒரு எக்ஸ் பதிவில், “ஒரு வாக்கு, ஒரு மதிப்பு” என்ற தற்போதைய கொள்கையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தெற்கு மற்றும் வடக்கு மாநிலங்கள் மக்களவை இடங்களை இழக்கும், அதே நேரத்தில் மத்திய இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மட்டுமே “மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கியவை” என்பதால் அவை மட்டுமே பெறும். இந்தப் பயிற்சிக்கான புதிய திடடத்தை உருவாக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.