இலங்கை
இரவுநேர களியாட்ட விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

இரவுநேர களியாட்ட விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்
கிரிபத்கொடை இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த 7 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களையும் உடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.