Connect with us

இலங்கை

தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும்! சுமந்திரன் தெரிவிப்பு

Published

on

Loading

தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும்! சுமந்திரன் தெரிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் கூட்டம் இன்று(08) மாலை மட்டக்களப்பில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

 இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவிவத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கூட்டம் இன்று நடைபெற்றது.

Advertisement

 இந்த கூட்டத்தில் பிரதானமாக ஒவ்வொரு பிரதேசமாக அலசி ஆராய்ந்து என்ன முறையிலான அணுகு முறையில் நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றது.

 மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். வருகின்ற வாரத்திற்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாக தீர்மானித்திருக்கின்றோம்.

 ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவது வேண்டாம் என்று கூட்டத்தின் போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த முயற்சி முடிவடைந்து விட்டது என்பது தான் என்னுடைய கருத்து. எங்களுடைய கட்சியின் தலைவர் அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தார்.

Advertisement

ஆனால் எங்களுடன் பங்காளிகளாக இருந்த கட்சிகள் தாங்கள் வேறு ஒரு கூட்டணியாக இணைந்து இருக்கின்றோம் என்று எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

 ஆகையினால் ஒரு அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது என்பது இப்போது முடியாத விடயம.; தமிழரசு கட்சி தனி அணியாக போட்டியிடும் தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகங்களை அமைக்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளுடன் இணைந்து தான் நிர்வாகத்தை அமைக்க வேண்டியதாக இருக்கும். அதுதான் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முறைமை ஆகையினால் அதை குறித்து தொடர்ச்சியாக பல கட்சிகளோடும் பேசிக் கொண்டு இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

images/content-image/1741406842.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன