Connect with us

இலங்கை

யுவதியிடம் அத்துமீறிய யாழ் யூடியூபரை தேடும் மனித உரிமைகள் ஆணைக்குழு!

Published

on

Loading

யுவதியிடம் அத்துமீறிய யாழ் யூடியூபரை தேடும் மனித உரிமைகள் ஆணைக்குழு!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவர், இளம் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் வரது பெயர், விபரங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

குறித்த யாழ்ப்பாண யூடியூபர்,  புலம்பயந்தோரிடம் பணத்தைப்பெற்று வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி  காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அந்தவகையில்,குடும்பம் ஒன்றிற்கு உதவி செய்வதாக தெரிவித்து குறித்த யூடியூபர் பெண்ணின் வீட்டிற்கு வந்த போது வீட்டில் இருந்த இளம் பெண் தன்னை காணொளி எடுக்க வேண்டாம் எனக் கூறிய போதிலும் வலுக்கட்டாயமாக அவரை காணொளி எடுக்க முயன்றுள்ளார்.

அதுமட்டுமல்லாது கடும் தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் யூடியூபர் பிரயோகித்துள்ளார்,

சமூக ஊடகங்களில் வெளியாகி பலரும் விசனக்களை தெரிவித்து வரும் நிலையில் , யூடியூபர் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன