சினிமா
வேண்டான்ணு சொல்லியும் அதை செய்றாங்க, ஒருமாதிரி இருக்கு!! மேடையில் கத்திய நடிகை..

வேண்டான்ணு சொல்லியும் அதை செய்றாங்க, ஒருமாதிரி இருக்கு!! மேடையில் கத்திய நடிகை..
சினிமா நடிகைகளுக்கு பிரபலங்களால் ஏற்படும் பிரச்சனை தாண்டி கூட்ட நெரிசல்களில் ஏற்படும் அசவுகரியத்தால் பெரிய சிக்கலை சந்தித்து வருவார்கள். அந்தவகையில் ஒரு இளம் நடிகைக்கு சமீபத்தில் நடந்த விழா மேடையில் கடுமையாக கோப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்து வரும் நடிகை ருக்சார் தில்லானுக்கு தான் அந்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ருக்சார், தில்ருபா என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இப்படம் வரும் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் டிரெய்லரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ருக்சார் தில்லான், கொஞ்சம் பொறுமை இழந்து கோபத்துடன் நடந்து கொண்டிருக்கிறார்.அதில் நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் சில புகைப்பட கலைஞர்கள் என் அனுமதியில்லாமல் போட்டோ எடுக்க வேண்டாம் என்று கூறினாலும் புகைப்படம் எடுக்கிறார்கள். அது எனக்கு அசெளகரியமாக இருக்கிறது. சாரி எனக்கு இப்படி எடுப்பது பிடிக்கவில்லை, அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பேசியுள்ளார்.