Connect with us

இலங்கை

ஏழரை சனி பெயர்ச்சிக்கு இந்த எளிய பரிகாரங்களை செய்தால் பிரச்சனை தீரும்

Published

on

Loading

ஏழரை சனி பெயர்ச்சிக்கு இந்த எளிய பரிகாரங்களை செய்தால் பிரச்சனை தீரும்

சனி பகவான் கர்ம காரகன் என அழைக்கப்படுகிறார். ஒருவரின் செயலுக்கு ஏற்ற பலனை தரக்கூடியவை. அந்த வகையில் ஒருவர் சிறப்பான செயல்களை, தர்ம காரியங்களை செய்யும்போது சனியின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்.

அதுவே ஒருவர் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடும் போது அவர் சனியின் மூலம் அசுப விளைவுகளை எதிர்கொள்கிறார். சனிபகவான் தரக்கூடிய அசுப பலன்களிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Advertisement

ஏழரை சனி நடக்கக்கூடிய ராசிகள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. தங்கள் வேலை, தொழில் தொடர்பான விஷயத்தில் அசுபமான பலன்களையும், சிக்கலான சூழ்நிலையையும் சமாளிக்க வேண்டிய சூழல் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி, சம்பள உயர்வில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் செயலில் நிதானமும் ஒழுக்கமற்ற நிலையும் இருக்கும்.
சனி பாதிப்பிலிருந்து விடுபட எளிய பரிகாரம்
சனியின் பாதிப்பில் இருக்கும் ராசிகள் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதும், அனுமான் வழிபாடு செய்வதும், சனி ஸ்தோத்திரத்தை உச்சரிப்பதும் நல்லது.

இதனால் உங்களின் அபாயமான சூழல் குறையும்.
உங்கள் குடும்பத்திலும், வெளியிடத்திலும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது அவசியம். உங்கள் பேச்சு, செயலில் நிதானம் தேவை. நேர்மறையான சிந்தனையும், இனிமையான பேச்சும் அவசியம்.

Advertisement

நிழலின் அருமை வெயிலில் அலைபவருக்கு தான் தெரியும் என்பார்கள். அந்த வகையில் வெயிலில் அலைந்து திரிபவர்களுக்கு இளைப்பாற நிழலை ஏற்படுத்தித் தருவதும், தாகத்தை போக்க சுத்தமான தண்ணீர் தருவதும் மிகப்பெரிய புண்ணியமாக இருக்கும்.

சனிக்கிழமைகளில் அதிகாலையில் குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து தூய மனதுடன் வீட்டில் பூஜை செய்து, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வரவும்.

உங்கள் ராசிக்கு ஏழரை சனி அல்லது ஜாதகத்தில் அசுபமான இடத்தில் சனி பகவான் இருப்பின் ஒவ்வொரு சனிக்கிழமையும், வெள்ளம் மற்றும் கருப்பு எள் கலந்த நீரை அரசமரத்திற்கு ஊற்றவும்.
தினமும் சூரிய பகவானுக்கு அர்க்கியம் செய்யவும்.

Advertisement

மாலை நேரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிய தீபத்தில் கருப்பு எள் திரியில் அரச மரத்திற்கு கீழே ஏற்றி வழிபாடு செய்யவும்.
மந்திரத்தை உச்சரிக்கவும்
சனி பகவானின் நல்லருளை பெற்றிட ஏழரை சனி, அஷ்டமா சனி, அர்த்தாஷ்டமச் சனி நடக்கக் கூடிய ராசிகள் அனுமான் சாலிசா, விநாயகர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கவும்.

இதன் மூலம் உங்களின் இன்னல்கள் குறையும்.
முடிந்த போதெல்லாம் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சிவ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வரவும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன