இலங்கை
தேசபந்து தென்னகோன் அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல்

தேசபந்து தென்னகோன் அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல்
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் பொலிஸாருக்கு பயந்து ஒரு பொலிஸ்மா அதிபர் ஓடி ஒளிந்து கொள்வது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஷானி அபேசேகர ஒரு திறமையான நபர் என்பதால், மறைந்திருக்கும் பொலிஸ்மா அதிபரை கைது செய்வார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.