சினிமா

46 வயதில் கர்ப்பமான சன்டீவி பிரபலம்…யார் தெரியுமா? வைரலான போட்டோஷூட்!

Published

on

46 வயதில் கர்ப்பமான சன்டீவி பிரபலம்…யார் தெரியுமா? வைரலான போட்டோஷூட்!

தமிழ் சினிமாவால் கொண்டாடப்படும் காமெடி நடிகர்களில் ஒருவரான ரெடின் கிங்ஸ்லி ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் மற்றும் ஜெயிலர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நகைச்சுவை பாணியால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகராக மாறியுள்ள அவர் திடீரென தனது மனைவி கர்ப்பமான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளார்.40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்த ரெடின் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சங்கீதா தென்னிந்திய சீரியலில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துவருபவர்.தற்போது 46 வயதான சங்கீதா கர்ப்பமாக இருக்கும் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இதன் மூலம் சங்கீதா, தனது மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றேன் எனவும் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகியதுடன்  ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.இந்த தகவல் வெளியானதிலிருந்து, திரையுலகில் பலரும் ரெடினுக்கும் சங்கீதாவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் “அந்த குழந்தை ரெடின் மாதிரி நகைச்சுவையாக இருப்பானா?” போன்ற தகவல்களை கமெண்டில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version