Connect with us

விளையாட்டு

IND vs NZ LIVE Score Final: சாம்பியன் பட்டத்தை வாகை சூடப் போவது யார்? இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்

Published

on

India vs New Zealand LIVE Cricket Score, Champions Trophy Final 2025

Loading

IND vs NZ LIVE Score Final: சாம்பியன் பட்டத்தை வாகை சூடப் போவது யார்? இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஆங்கிலத்தில்  படிக்கவும்: India vs New Zealand LIVE Cricket Score, Champions Trophy Final 2025இந்நிலையில், ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு துபாயில் தொடங்கி நடைபெற உள்ளது. துபாயில் நடந்த முதல் அரையிறுதியில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும்,  இந்தத் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆதிக்கம் செலுத்தி வரும் அணியாக இருந்து வருகிறது. லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் உறுதியான வெற்றியைப் பெற்றது.மறுபுறம், நியூசிலாந்து அணி, லாகூரில் நடந்த 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம், 2009-க்குப் பிறகு முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து  அணி, 2000-ஆம் ஆண்டு கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையில், இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வெல்லும் உறுதியுடன் களமாட உள்ளது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில்  அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. நேருக்கு நேர் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இதுவரை 119 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 61 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், நியூசிலாந்து 50 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது. ஏழு போட்டிகள் கைவிடப்பட்டன.கடைசியாக  இவ்விரு அணிகள் துபாயில் மோதிய லீக் ஆட்டத்தில்  இந்தியா நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள மைதானங்களுடன் ஒப்பிடும்போது துபாய் மைதானம் குறைந்த ஸ்கோரிங் பரப்பளவாக இருந்து வருகிறது. இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது, மேலும் இறுதி ஓவர்களில் பந்து பழையதாகவும் மென்மையாகவும் மாறியவுடன், பவர்பிளேயில் புதிய பந்தை விட பேட்டிங் மிகவும் கடினமாக இருக்கும். எனவே முதல் இன்னிங்ஸ் அல்லது இரண்டாவது இன்னிங்ஸ் எதுவாக இருந்தாலும், பந்து புதியதாகவும் கடினமாகவும் இருக்கும்போது அணிகள் முதல் 10 ஓவர்களை பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்.நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க், மேட் ஹென்றி/நாதன் ஸ்மித்இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன