Connect with us

சினிமா

“இசை தெய்வம்” என்று அழைக்க வேண்டாம் …. இளையராஜாவின் அதிரடிக் கருத்து!

Published

on

Loading

“இசை தெய்வம்” என்று அழைக்க வேண்டாம் …. இளையராஜாவின் அதிரடிக் கருத்து!

தமிழ் திரையுலகில் இசையின் உச்சத்தை தொட்ட இசைஞானி இளையராஜா தனது எளிமையான மனப்பான்மையால் ரசிகர்களின் மனதை மீண்டும் வென்றுள்ளதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரை ‘இசை தெய்வம்’ என்று ரசிகர்கள் புகழ்ந்து கூறியுள்ளனர்.அந்நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த இளையராஜாவை சில ரசிகர்கள் ‘இசை தெய்வம்’ என்று பாராட்டினர்கள். அதற்கு மிக எளிமையான பதிலை அளித்த அவர், “நான் ஒரு சாதாரணமான மனிதன் என்னை அப்படி எல்லாம் அழைக்க வேண்டாம்” என்று கூறினார்.அவருடைய இந்த பதில், அவரது ஆளுமை மற்றும் தன்னைப் பற்றிய எளிமையான பார்வையை வெளிப்படுத்தியது. 1970களிலிருந்து தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்ட இளையராஜா தன்னை உயர்த்திப் பேசாமல் இருப்பவர் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.இளையராஜா திரையிசையில் புரட்சியை ஏற்படுத்தியவர். இவர் 1000க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளதுடன் மேற்கத்திய இசையின் ஒத்திசைவு மற்றும் கர்நாடக இசையின் நுட்பம் எனப் பல்வேறு இசைக் கலவைகளை தமிழ்த் திரையுலகில் புதுமையாக கொண்டு வந்தவர்.இளையராஜா எப்போதும் தன்னை எளிமையாகவே காட்டிக் கொண்டிருப்பவர். சிறந்த சாதனைகளைப் படைத்திருந்தாலும் அந்த பெருமையை வெளிப்படுத்தாமல் எளிமையாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இது பலருக்கும் பிரமிப்பு அளிக்கும் விடயமாக காணப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன