சினிமா
இயக்குநருடன் ஒத்துவரவில்லை!! நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

இயக்குநருடன் ஒத்துவரவில்லை!! நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு
நயன்தாரா, இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்தவர் ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் சென்று அங்கேயும் வரவேற்பு பெற்றுள்ளார்.தற்போது நயன்தாரா என்றாலே சர்ச்சை என்ற நிலை உருவாகிவிட்டது. சமீபகாலமாக அவர் மீது சர்ச்சைகள் அதிகம் எழ ஆரம்பித்திருக்கின்றன.இந்நிலையில், இயக்குநர் லிங்குசாமி முன்பு பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதாவது, லிங்குசாமி கார்த்தி நடிப்பில் இயக்கிய பையா திரைப்படத்தில் முதலில் நடிகை தமன்னாவை தான் நாயகியாக நடிக்க வைக்க முடிவெடுத்தாராம்.ஆனால், இயக்குநருக்கும், நயனுக்கும் சில விஷயங்களில் ஒத்துவராததால் நயன்தாராவுக்கு பதில் இந்த படத்தில் நடிகை தமன்னாவை நடிக்க வைத்தாராம்.