சினிமா
தளபதி விஜய் பற்றி ஓபனாக பேசிய ஜனநாயகன் பட வில்லன்.. என்ன சொன்னார் தெரியுமா

தளபதி விஜய் பற்றி ஓபனாக பேசிய ஜனநாயகன் பட வில்லன்.. என்ன சொன்னார் தெரியுமா
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள்.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், ப்ரியாமணி, கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்து வருகிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். அனிமல் படத்தில் இவருடைய வில்லத்தமான நடிப்பை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வருகிறது. தமிழில் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ஜனநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் பாபி தியோலிடம், பத்திரிகையாளர் தளபதி விஜய் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதிலளித்த பாபி தியோல், “தளபதி விஜய்யுடன் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அவர் மிகவும் இனிமையான நபர். எப்போதும் சிம்பிளாக இருப்பார்” என அவர் கூறியுள்ளார். விஜய் குறித்து பாபி தியோல் பேசியது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.