Connect with us

தொழில்நுட்பம்

ஸ்டைலான புது போன் வாங்கணுமா? ரூ20000 பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் கொண்ட 5 மொபைல்களின் பட்டியல் இங்கே

Published

on

infinix

Loading

ஸ்டைலான புது போன் வாங்கணுமா? ரூ20000 பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் கொண்ட 5 மொபைல்களின் பட்டியல் இங்கே

உங்களது மொபைலை மாற்ற திட்டமிட்டுள்ளீர்களா.! புதிய மொபைல் வாங்க உங்களின் பட்ஜெட் ரூ.20,000 என்றால் இங்கே, பட்ஜெட்டிற்குள் பல அம்சங்களுடன் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களைப் பற்றி பார்க்கலாம்.இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்1). நத்திங் சி.எம்.எஃப். போன் 1 (Nothing CMF Phone 1)தங்களது ஸ்மார்ட்போனை அலங்கரிக்க விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்றது நத்திங் சி.எம்.எஃப். போன் 1. எளிதில் மாற்றக்கூடிய வண்ணமயமான பின்புற பேனல்களைக் கொண்டுள்ளது. ஜெப்டோ (Zepto) போன்ற தளங்களில் ரூ.13,000க்கும் குறைவான விலையில் நத்திங் CMF Phone 1-ஐ பெறலாம், இது ஒரு ஸ்டைலான தேர்வாக மட்டுமல்லாமல், இந்த விலையில் சிறந்த பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6 GB ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலின் டிஸ்ப்ளே சைஸ் 6.67 இன்ச் (16.94 செமீ) ஆகும். 2). ரியல்மி நார்சோ 70 டர்போ (Realme Narzo 70 Turbro) ரியல்மி நிறுவனத்தின் Narzo 70 Turbro மொபைல் ரூ.17,000க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. மஞ்சள் நிறத்தில் ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ் உடன் 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 GB ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸரை கொண்டு இயங்கும் இந்த மொபைலின் டிஸ்ப்ளே சைஸ் 6.67 இன்ச் (16.94 செமீ) ஆகும். அமோலெட் டிஸ்பிளே, 50 எம்.பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரள விடுகிறது. ஸ்டைல் மற்றும் செயல்திறன் இரண்டையும் எதிர்பார்ப்பவர்களுக்கு சிறந்தது.3). டெக்னோ போவா 6 ப்ரோ (Tecno Pova 6 Pro)108 எம்.பி. கேமரா, டைமன்சிட்டி 6080 சிப்செட், 6000 mAh பேட்டரி, 70W சார்ஜிங், டைனாமிக் லைட் எஃபெக்ட் (Dynamic Light Effect) பேக் பேனல் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட டெக்னோ போவா 6 ப்ரோ, போன் 20,000 ரூபாய்க்கு கீழ் விற்கப்படுகிறது.4). லாவா பிளேஸ் டியோ (Lava Blaze Duo)லாவா பிளேஸ் டியோ 5ஜி ஸ்மார்ட்போன், இரண்டாம் நிலை AMOLED டிஸ்ப்ளேயுடன், 6.67 இன்ச் வளைந்த AMOLED பிரதான டிஸ்ப்ளேயுடன், 120Hz புதுப்பிப்பு வீதம், 64MP பின்புற கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா ஆகியவற்றுடன் ரூ.16,999 விலையில் கிடைக்கும்.5). இன்ஃபினிக்ஸ் ஜி.டி 20 ப்ரோ (Infinix GT 20 Pro)கேமிங்-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் ஜி.டி 20 ப்ரோ. டைமன்சிட்டி 8200 அல்டிமேட் சிப், 8GB/12GB ரேம் மற்றும் 256GB உடன் இயங்கும் இந்த போன், எந்த விளையாட்டிலும் எளிதாகச் செயல்படும். 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAh பேட்டரி பேக்கப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன