தொழில்நுட்பம்
கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட்நியூஸ்… ரூ.100-க்கு ரீசார்ஜ்; ஜியோ வழங்கும் செம பிளான்!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட்நியூஸ்… ரூ.100-க்கு ரீசார்ஜ்; ஜியோ வழங்கும் செம பிளான்!
இந்தியாவில் ரூ.100-க்கு ஜியோ ப்ரீபெய்ட் சிம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு ”ஜியோ ஹாட்ஸ்டார்” சந்தாவை பெறும் வகையில் ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரூ.100-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஜியோ ரீசார்ஜ் திட்டமானது டேட்டா-ஒன்லி பிளான். அதாவது, இந்த திட்டம் மொத்தமாக 5 ஜி.பி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கும். மேலும், 3 மாதங்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்கும்.சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இது ரூ.149 க்கு கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை போல் மொபைல்-ஒன்லி சந்தா கிடையாது. அதாவது, ஜியோஹாட்ஸ்டார் ஓ.டி.டி கன்டென்ட்களை மொபைல் வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்கிற கட்டுப்பாடு ரூ.100 திட்டத்தில் இல்லை. மாறாக இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டி.வி-கள் ஆகிய இரண்டிலும் 1080பி வரையிலான ரெசல்யூஷனின் கீழ் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. இதேதான், ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர் திட்டமும் வழங்குகிறது. ஆனால் அந்த சந்தாவின் விலை ரூ.299 ஆகும். ஆக எப்படி பார்த்தாலும் ரூ.100 டேட்டா பிளானின் கீழ் கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார் சந்தாவானது முற்றிலும் லாபகரமான தேர்வாக இருக்கும். மற்றபடி வாய்ஸ், எஸ்.எம்.எஸ். போன்றவை இதில் இல்லை.வருகிற 22-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் சீசன் மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புதிய கிரிக்கெட் பிளான் வரவிருக்கும் ஐ.பி.எல் 2025 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் ஒரு டேட்டா-ஒன்லி ரீசார்ஜ் ஆகும்.https://indianexpress.com/article/technology/tech-news-technology/jio-data-pack-5gb-data-jio-hotstar-subscription-for-rs-100-9878405/