Connect with us

சினிமா

ஹீரோ இல்ல, ரொமான்ஸ் இல்ல.. கமல் படத்தை வாங்க மறுத்த விநியோகஸ்தர்

Published

on

Loading

ஹீரோ இல்ல, ரொமான்ஸ் இல்ல.. கமல் படத்தை வாங்க மறுத்த விநியோகஸ்தர்

நடிகனாக பல படங்களில் நடித்தாலும் தயாரிப்பாளராக வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்த நிலையில் நல்ல வசூலை பெற்றிருந்தார்.

தொடர்ந்து இளம் நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்து வருகிறார். இந்நிலையில் கமல் தயாரித்த படம் ஒன்றை ஹீரோ இல்ல, ரொமான்ஸ் இல்ல, குத்துப்பாட்டு எதுவுமே இல்லை என விநியோகஸ்தர் வாங்க மறந்துவிட்டார்.

Advertisement

ஆனால் கமல் தனது சொந்த செலவில் அவரே படத்தை வெளியிட்டு வெள்ளிவிழா கண்டிருக்கிறார். சங்கீத சீனிவாச ராவ் இயக்கத்தில் 1994 இல் வெளியான படம் தான் மகளிர் மட்டும்.

கிரேசி மோகன் திரைக்கதையில் கமல் இந்த படத்தை தயாரித்திருந்தார். இதில் ரேவதி, ஊர்வசி, ரோகினி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மகளிர் மட்டும் படம் மிகவும் நகைச்சுவையோடு பெண்களுக்கு நடக்கும் இன்னல்கள் மற்றும் அவர்களால் எல்லாமே முடியும் என்பதை காட்டும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

மேலும் இந்த படத்தில் நாகேஷ் இறந்த பிணமாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த படம் ஓடாது என பல விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மறுத்து விட்டார்கள். அதன் பிறகு கமலே இந்த படத்தை வெளியிட்ட நிலையில் 25 வாரங்கள் ஓடியது.

அதோடு மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இப்போதும் மகளிர் மட்டும் படத்திற்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் பார்த்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன