Connect with us

பொழுதுபோக்கு

25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு நடிக்க வருகிறார்… விஜயின் பூவே உனக்காக சங்கீதா!

Published

on

Sangeetha Mathanvan nair

Loading

25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு நடிக்க வருகிறார்… விஜயின் பூவே உனக்காக சங்கீதா!

நடிகர் விஜய் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பூவே உனக்காக படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. தமிழ்ம் மலையாளம், கன்னட சினிமாக்களில் நடித்துள்ளார். நடிகை சங்கீதா திருமணத்திற்குப் பின், பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சங்கீதா, மலையாளத்தில் நடித்து வரும் நிலையில், 25 ஆண்டுகளுக்கு பின்,  தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார் என்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் 1996-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில், நடித்த சங்கீதா மிகவும் பிரபலமானார். 1978-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சினேகிகன் ஒரு பெண்ணு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, சங்கீதா. என் ரத்தத்தின் ரத்தமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அதற்கு பிறகு, தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் நடித்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் விஜய்யின் மிகப் பெரிய வெற்றிப் படமான பூவே உனக்காக படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த சங்கீதாவை இன்னும் மறந்துவிடவில்லை. பல நடிகைகள், நடிகர்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்தாலும், சில ஆண்டுகளுக்கு பின், அவர்கள் மீண்டும் நடித்துள்ளனர். அப்படி, நடிகை சங்கீதா எப்போது நடிப்பார் என்று எதிர்பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.கேரளாவைச் சேர்ந்த நடிகை சங்கீதா ஒளிப்பதிவாளர் சரவணனை 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சிம்புவின் சிலம்பாட்டம் படத்தை இயக்கியவர். திருமணத்துக்குப்பின், சினிமாவில் இருந்து விலகி இருந்த சங்கீதா, கடந்த 2014-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான  ‘நகர வருதி நடுவில் நியான்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தார். ஆனாலும், அவர் தொடர்ந்து நடிக்கவில்லை. பின்னர், 2023-ம் ஆண்டு ‘சாவித்’ எனும் மலையாள படத்தில் நடித்தார். அதன் பிறகு,  ‘பராக்கிரமம், ஆனந்த் ஸ்ரீ பாலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜயின் பூவே உனக்காக படத்தில் நடித்த நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் எப்போது நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் பரத் நடிக்கும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தி  வெளியாகி உள்ளது.நடிகர் பரத் நடிக்கும் காளிதாஸ் 2 படத்தின் மூலம் நடிகை சங்கீதா தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்துள்ளார். 47 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் சங்கீதாவைப் பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். இந்த படத்தில் சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஹீரோயினாக நடித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன