Connect with us

இலங்கை

ஆடம்பர வாழ்க்கைக்காக பணத்தை வாரி இறைக்கும் ராசிக்காரர்கள்

Published

on

Loading

ஆடம்பர வாழ்க்கைக்காக பணத்தை வாரி இறைக்கும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தில் ராசிகளுக்கான குண நலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் சில ராசிகள், தங்கள் ஆடம்பரத்திற்காகவும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

அந்த வகையில் வீண் செலவு செய்வதில் முதலிடம் வகிக்கும் ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம்.

Advertisement

மேஷ ராசியினர், செலவு செய்வதற்கு முன்பு சிந்திக்கும் வழக்கம் இல்லாதவர்கள். ரிஸ்க் எடுக்க அஞ்சாதவர்கள். திடீர் செலவுகளை பற்றி புரிந்தும் கவலைப்படாதவர்கள். இருப்பினும் இவர்கள் கொஞ்சம் யோசித்து திட்டமிட்டு செலவு செய்தால், நிதி நிலையை மேம்படுத்தி, நிலைமையை கட்டுப்படுத்த முடியும்.

மிதுன ராசிக்காரர்கள், புதிய விஷயங்களை முயற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அதற்காக பணத்தை செலவு செய்ய தயங்காதவர்கள். அது ஆடைகளுக்காக இருக்கலாம். அல்லது புதிய கேட்ஜெட்டுகளை வாங்கி குவிப்பதில் இருக்கலாம். பணத்தை வாரி இறைப்பதை கட்டுப்படுத்தினால், கடன் தொல்லை இல்லாமல் வாழலாம்.

சிம்ம ராசிக்காரர்கள், ஆடம்பரத்தையும் அந்தஸ்தையும் பெருமையும் காட்டிக்கொள்ள, பணத்தை வாரி இறைக்க தயங்காதவர்கள். தன்னுடைய நிலைமை மீறி செலவு செய்து, தனது கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள நினைப்பார்கள். இந்த மனநிலையில் இருந்து அவர்கள் வெளி வந்தால், அவர்கள் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேறலாம்.

Advertisement

துலாம் ராசிக்காரர்கள், வாழ்க்கையை அனுபவிக்க நினைப்பவர்கள். அதற்காக செலவு செய்ய தயங்காதவர்கள். கலைப் பொருட்கள், அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள் ஆகியவற்றை வாங்கி குவிப்பார்கள். பட்ஜெட் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் சேமிப்பை பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல. இன்றைய தினம் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன், பொழுதுபோக்கிற்கும் ஆடம்பரத்திற்கும் அதிகம் செலவழிப்பார்கள். நிதியை கொஞ்சம் திட்டமிட்டு செலவு செய்தால், கடன் தொல்லைகளை தவிர்ப்பதோடு, நிதி நிலைமையும் முன்னேறும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன