இலங்கை
ஆட்டுக்கு புல் அறுக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

ஆட்டுக்கு புல் அறுக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
பொகவந்தலாவை லெச்சுமி தோட்டம், மத்திய பிரிவு, பத்தாம் இலக்க தேயிலை மலைக்கு அருகாமையில் உள்ள கால்வாயிலிருந்து நேற்று (11) இரவு ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் ஆட்டுக்கு புல் அறுப்பதற்காக நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் இரவு நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்த நிலையில்இதனால் தோட்ட மக்கள் இணைந்து குடும்பஸ்தரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது கால்வாயில் சடலம் கிடப்பதை கண்டு பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக கிளங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.