சினிமா
சொல்லி அடிக்கும் கில்லியாக பிரதீப், தொடர் சறுக்கலில் விக்கி.. கரை சேருமா LIK?

சொல்லி அடிக்கும் கில்லியாக பிரதீப், தொடர் சறுக்கலில் விக்கி.. கரை சேருமா LIK?
தொடர் வெற்றிகளை கொடுக்கும் வரையில்தான் சினிமா துறையில் ஒரு ஹீரோ தலை தப்பும். ஒரு சறுக்கல் என்றாலும் உடனே இனி இந்த ஹீரோ அவ்வளவுதான் என கதை கட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
எத்தனையோ டாப் ஹீரோக்களை கூட ஒரு சறுக்கல் படத்தால் அப்படியே கீழே இறக்கி போட்டதுண்டு. அப்படி ஒரு விஷயம் நடந்து விடுமோ என பிரதீப் ஆண்டனியின் ரசிகர்களுக்கு சற்று உதறலாகவே இருக்கிறது.
டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த தனுஷ், சிவகார்த்திகேயன் என பிரதீப்புக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்படுகிறது.
இவருடைய நடிப்பில் அடுத்த வெளியாக இருப்பது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தை இயக்குபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இவருக்கு நானும் ரௌடி தான் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு. வெற்றி படங்கள் எதுவும் இல்லை அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர்கள் சிலருக்கு அதிருப்தி இருப்பதாகவும் வலைப்பேச்சு சேனலில் சொல்லப்பட்டது.
சொல்லி அடிக்கும் கில்லியாக வலம் வரும் பிரதீப், தொடர் சருக்கலில் இருக்கும் விக்கியை தூக்கி விடுகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.