பொழுதுபோக்கு
புஷ்பா கேரக்டரில் நடிக்க மறுத்தேன்: எனக்கு பிடித்த வில்லி இவர் தான்; நடிகை ரேஷ்மா சிறப்பு பேட்டி!

புஷ்பா கேரக்டரில் நடிக்க மறுத்தேன்: எனக்கு பிடித்த வில்லி இவர் தான்; நடிகை ரேஷ்மா சிறப்பு பேட்டி!
திரையுலகில், சினிமா, சின்னத்திரை, வெப்சிரீஸ் என அனைத்திலும் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ரேஷ்மா பசுபலேட்டி சமீபத்தில், வசந்த் & கோ உடன் பஜாஜ் இணைந்து நடத்திய மகளிர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய சமையலறைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பஜாஜ் நிஞ்ஜா, மிலிட்டரி, மற்றும் ஆர்மர் மிக்சர் கிரைண்டர் சீரிஸை அறிமுகப்படுத்துகிறது.நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேஷ்மா பசுபலேட்டியிடம், அவரது சினிமா அனுபவர்கள் குறித்து பேசினோம். முதலில் இந்த நிழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்த அவர், வசந்த் அன்கோ மற்றும் பஜாஜ் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், புதிய சாதனைங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கு பெண்களுக்கான பல போட்டிகள் நடத்தப்பட்டது. மகளிர் தினத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியாக இருகிறது. நான் இந்த நிகழ்ச்சியில் உடைத்த கடளை சட்னி செய்தேன் நன்றாக இருப்பதா சொன்னார்கள் அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போயிவிடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். உங்களுக்கு நடிப்பில் ஆர்வம் வர காரணம் என்ன?எனக்கு டைம் ரொம்ப ஃப்ரியா இருந்தது. அதனால் நடிப்பில் இறங்கிவிட்டேன்.நடிப்புக்காக ஆடிஷன் போய் ரிஜக்ட் ஆன அனுபவம் இருக்கிறதா?நான் ஆடிஷன் போய் ரிஜக்ட் ஆகவே இல்லை. ரிஜக்ட் ஆகிவிடுவேன் என்று தெரிந்தால் நான் அங்கு போகவே மாட்டேன். முதலில் நியூஸ் ரீடிங் போகும்போது எனக்கு காண்ஃபிடன்ட் இருந்தது. இங்கிலீஸ் எனக்க தெரியும் என்பதால் அதில் செலக்ட் ஆகிவிட்டேன். நமக்கு ஏதாவது தெரியாது என்று தோன்றினால் ஒருமுறை ட்ரை பண்ணுவேன் அதன்பிறகு விட்டுவிடுவேன். படங்களில் என்னை ரிஜக்ட் செய்திருக்கலாம். ஆனால் எனக்கு தெரியவில்லை. இந்த மாதிரி ரிஜக்ஷன் எல்லாம் வாழ்க்கையில் அனுபவம் பெற வேண்டும். அப்படி அனுபவித்தால் தான் வாழ்க்கையில் வலிமையாக முடியும்.உங்களின் முதல் படம் மசாலா படத்தில் உங்கள் ரிலேஷன் பாபி சிம்ஹாவுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? அந்த படத்தில் பாபியுடன் எனக்கு சீன்ஸ் இல்லை. எனக்கு ஜோடியாக வேறொருவர் நடித்திருந்தார். அவருடன் தான் எனக்கு சீன்ஸ் அதிகமாக இருந்தது. எனது முதல் பட அனுபவம் அது. அதை நான் நன்றாக எஞ்ஜாய் பண்ணேன். நிறை கற்றுக்கொண்டேன். சீரியலை விடவும், படங்களில் நடிப்பு என்பது வித்தியாசமாக இருக்கும். இது எனக்கு புது அனுபவம். எனக்கு நேரம் நன்றாக இருந்தது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் உங்களுக்கு பெரிய அடையாளமாக அமைந்தது. அந்த புஷ்பா கேரக்டர் பத்தி சொல்லும்போது நீங்க என்ன நினைச்சீங்க?அநத கேரக்டரில் நான் முதலில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டேன். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் இதில் எந்த க்ளாமர் சீனும் இல்லை கொஞ்சம் பண்ணிக்கொடுங்க என்று சொன்னார். அதன்பிறகு ஒப்புக்கொண்டேன். ஆனால் இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மசாலா படம் பெரிய ஹிட்டாகும் நாம் ஹீரோயின் ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை. புஷ்பா கேரக்டர், விலங்கு சீரிஸில் செல்வி கேரக்டர் ஓகேவாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பார்ப்பை விடவும் பெரிய வெற்றி கிடைத்தது. விலங்கு வெப் தொடரும் உங்களுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த வாய்ப்பு கிடைத்த அனுபவம் பற்றி சொல்லுங்க?இந்த படத்தின் தரப்பில் இருந்து என்னிடம் இந்த கேரக்டரை சொல்லி பண்றீங்களா என்று கேட்டார்கள். வழக்கம்போல் நான் பண்ண மாட்டேன் என்று சொன்னேன். க்ளாமர் அதிகமாக இருக்கிறது என்பதால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு ஜீ5 அவ்வளவு க்ளாமர் இல்லை என்று சொன்னதால் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். நடிப்பதற்கு முன் இவ்வளவு தான் நடந்தது. சினிமா சீரியல் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீங்க?இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் பேமண்ட்ஸ் தான்.இன்றைய காலகட்டத்தில் வெப் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நீங்க சினிமா சீரியல் வெப் தொடர் மூன்றிலும் நடிச்சிருக்கீங்க. இதில் எது பெஸ்ட்னு நினைக்கிறீங்க?எதில் பேமண்ட்ஸ் அதிகமாக இருக்கிறதோ அதுதான் பெஸ்ட்.பாக்கியலட்சுமி ராதிகா நல்லவரா கெட்டவரா?நான் ரொம்ப நல்லவளா சீரியலில் இருந்து வெளியில் கூட வந்துவிட்டேன். கோபி தான் கெட்டவர். கோபிதான் வில்லன் ராதிகா நல்லவள் என்று போட்டுக்கொள்ளுங்கள். சீதாராமன் மகாலட்சுமி/ கார்த்திகை தீபம் சாமுண்டீஸ்வரி இதில் உங்களுக்கு பிடித்த வில்லி யார்எனக்கு பிடித்த வில்லி ரேஷ்மா பசுபுலேட்டி தான். அவங்களை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்கதான் எந்த கேரக்டர் கொடுத்தாலும் சூப்பரா நடிக்கிறாங்க. அதனால் அவங்களை தான் எனக்கு பிடிக்கும்.