Connect with us

உலகம்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

Published

on

Loading

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

Advertisement

இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது ஊழல், இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை நாடு கடத்த வேண்டும் என்று வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஷேக் ஹசீனா மீதான ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று டாக்கா கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் இல்லமான சுதாசதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

மேலும் ஷேக் ஹசீனாவின் குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

images/content-image/1741799685.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன