Connect with us

இந்தியா

அதிகமுறை ரத்த தானம் செய்த நபர்: புதுச்சேரி பா.ஜ.க பிரமுகருக்கு ‘உலக சாதனை விருது’

Published

on

Loading

அதிகமுறை ரத்த தானம் செய்த நபர்: புதுச்சேரி பா.ஜ.க பிரமுகருக்கு ‘உலக சாதனை விருது’

புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையை சேர்ந்த சமூக சேவகரும், 35 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் தன்னை முழு நேரமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் டாக்டர் க.வெற்றிச்செல்வம் தொடர்ந்து 33 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து வருகிறார், தற்போது இவர், அதிக முறை ரத்ததானம் (105 முறை) செய்ததை பாராட்டி பிபின் ராவத் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்  “உலக சாதனை” விருது வழங்கி கௌரவப்படுத்தியது.1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2024 டிசம்பர் மாதம் வரை கணக்கெடுத்து, ஆய்வு செய்து, உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் தனி நபர் ஒருவர் அதிக முறை ரத்ததானம் வழங்கியவர் என்ற அடிப்படையில் இந்த உலக சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த விருது புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ஓபரா கார்டனில் பிபின் ராவத் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் இயக்குனர் டாக்டர் வினோத்குமார் குழுவினர் ஏற்பாட்டில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.மேலும், ஜிப்மர் மருத்துவமனையில் அதிக முறை ரத்ததான வழங்கிய தன்னார்வலர்கள் மற்றும் ரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்தவர்கள் ஆகியோரை கௌரவப்படுத்தும் விழாவிலும் ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நெகி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் துரைராஜன், பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு குழுமத்தின் திட்ட இயக்குனர் திருமதி சித்ரா தேவி, ஜிப்மர் ரத்தவங்கி தலைமை மருத்துவர் டாக்டர் அபிஷேக், டாக்டர் வடிவேல் ஆகியோர் வெற்றிச்செல்வத்தை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினர்.ஜிப்மர் மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவர்கள் கேட்டுக் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, வெற்றிச்செல்வம் ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார். அப்போது அவர், வருடம் 22,000 க்கும் மேற்பட்ட ரத்ததான தன்னார்வலர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் ரத்ததானம் அளித்து லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் கோடிக்கணக்கான மணி நேரங்களை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் ஜிப்மர்  மருத்துவர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும், அதிகாரிகளையும், ஊழியர்களையும் பாராட்டினார்.  மேலும் அவர் கூறுகையில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற வாழ்க்கையில் மதிக்கக் கூடிய மந்திரச் சொல்லின் வரிசையாக இருந்தாலும் அதையும் தாண்டி அறுவை சிகிச்சை நோய்களை குணப்படுத்துவதிலும் கடவுளை வேண்டிய பிறகு தியாகத்தின் திருவுருவமாக இருக்கின்ற மருத்துவர் களைத்தான் நாம் வேண்டுகிறோம். ஆகையினால் மாதா, பிதா, குரு, தெய்வம் மற்றும் மருத்துவர்கள் என்ற  முறையில் நாம் போற்றினால் பொருத்தமாக இருக்கும் என்கிற கருத்தை தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன